The highest grossing Telugu film in North India is Spider

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான படம் ‘ஸ்பைடர்’.

இந்தப் படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகின்றது.

ஸாடிசம், மனிதாபிமானம் என்ற ஒற்றைப் புள்ளியை மையமாக கொண்டு மக்கள் தற்போது இருக்கும் மனநிலையை அறிவியல் பூர்வமாக சொல்லியிருப்பது ஏ.ஆர்.முருகதாஸின் உழைப்பை காட்டுகிறது.

7-ஆம் அறிவு படத்தில் செய்த அதே அறிவியல் பூர்வமான ஒரு முயற்சியை இந்த படத்திலும் செய்திருக்கிறார்.

படம் பார்க்கும் அனைவரின் மனதிலும் எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பு நிலைத்துவிடும் என்பதில் ஐயமில்லை.

தெலுங்கில் இதுவரை காணாத தோல்வியை இப்படம் சந்தித்துள்ளது, ஆனால், தமிழகத்தில் ஓரளவிற்கு இந்தப் படம் நல்ல வசூலை பெற்று வருகின்றது.

இதில் குறிப்பாக சென்னையில் மட்டும் இப்படம் ரூ 2.8 கோடி வரை வசூல் செய்துள்ளது,

வட இந்தியாவில் ரூ 7 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது

வட இந்தியாவில் அதிகம் வசூல் செய்த தெலுங்குப் படங்களில் ‘ஸ்பைடர்’ படமும் ஒன்றாம்.