ஒரு நிகழ்ச்சியில் பொதுமேடையில் இரு நடிகைகளுடன் கலந்து கொண்டு பேசியபோது நடிகையின் மார்பகத்தை பற்றி நடிகர் விஜய் தேவர கொண்டா கூச்சமே இல்லாமல் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

தெலுங்கு சினிமாவில் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலமாக ரசிகர்களை மனதை கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா. தமிழில் இவர் நோட்டா படத்தில் நடித்திருந்தார். அடுத்ததடுத்த படங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் ராசி கண்ணாவுடன் இணைந்து நடித்துள்ள வோர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தின் ப்ரோமோஷனுக்காக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது ராஷி கண்ணா ’க்டருடன் டேட் செய்தால் எப்படி இருக்கும் என பேசிய போது விஜய் தேவரகொண்டா குறுக்கிட்டு ’டாக்டர் ராஷிகண்ணாவின் மார்பகத்தைத் தான் பார்ப்பார்’ என பேசியுள்ளார். நடிகைகளுக்கு நடுவில் அமர்ந்து கொண்டு விஜய் தேவரகொண்டா இவ்வாறு பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 

உங்களுக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ளார்கள். பேசுவதற்கு முன்னர் நன்றாக யோசித்து பேசுங்க என விஜய்க்கு ரசிகர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.