இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான 'வேதாளம்' திரைப்படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் மட்டும் இன்றி அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்று மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. 

பாடல்கள்:

இந்த படத்திற்கு இசையமைதிருந்தவர் இளம் இசையமைப்பாளர் 'அனிருத்' இந்த படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில்.... குறிப்பாக ஆலுமா டோலுமா பாடல் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது.
 
இந்நிலையில் தற்போது இந்தியாவில் நடந்து வரும் கால்பந்து லீக் போட்டி பைனலை நெருங்கியுள்ளது.

இதில் அதிகாரப்பூர்வ ISL டுவிட்டர் பக்கத்தில் 4 பாடல்களை குறிப்பிட்டு இதில் உங்கள் பேவரட் எது என்று கேட்க, அதில் தமிழக வீரருக்காக ஆலுமா டோலுமா பாடலை குறிப்பிட்டுள்ளனர்.

இதுவரை எந்த ஒரு பாடலுக்கும் கிடைக்காத கெளரவம் அஜித் படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடலுக்கு கிடைத்துள்ளதால் இதனை தல ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஷேர் செய்தும், வாக்களித்தும் வருகின்றனர்.