TheGreatIndianKitchen : கடந்த வருடம் மலையாள மொழியில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் ஜனவரி 21 ஆம் தேதி ஜப்பான் திரையரங்குகளில் வெளியிடுகின்றனர். இந்தியப் படங்கள் அரிதாகவே ஜப்பானில் வெளியாகும் அந்த வாய்ப்பு தி கிரேட் இன்டியன் கிச்சன் படத்துக்கு கிடைத்துள்ளது. 

விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ், மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட "கனா" படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இவர் போலீஸ் அதிகாரியாக நடித்து ஓடிடியில் வெளியான 'திட்டம் இரண்டு' திரைப்படம் மற்றும் சமீபத்தில் விஜய் டிவியில் நேரடியாக வெளியான பூமிகா ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்ட துவங்கியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக கிளாமரையும் கையில் எடுத்துள்ளார். பாலிவுட் படமான டாடி படத்தில் அர்ஜுன் ராம்பாலுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். 

இவர் தற்போது தமிழில் ரீமேக்காகவும் தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தில் கமிட் ஆகியுள்ளார்.. இந்த படம் ஜியோ பேபி இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. நிமிஷா சஜயன், சுராஜ் வென்ஞாரமூடு நடித்திருந்த இந்தப் படம் உடனடியாக பெரும் வரவேற்பை பெற்றது. அதே வேளையில் இந்தியக் குடும்ப பெண்களின் நிலை குறித்து பகிரங்கமாக எடுத்துரைத்த இந்த படம் பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளானது. 

தற்போது அதே தலைப்பில் இந்த படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இதன் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி பாராட்டை பெற்றது.

இந்நிலையில் கடந்த வருடம் மலையாள மொழியில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் ஜனவரி 21 ஆம் தேதி ஜப்பான் திரையரங்குகளில் வெளியிடுகின்றனர். இந்தியப் படங்கள் அரிதாகவே ஜப்பானில் வெளியாகும் அந்த வாய்ப்பு தி கிரேட் இன்டியன் கிச்சன் படத்துக்கு கிடைத்துள்ளது.