the first film got Rs 1700 crore in box office collections

இந்திய சினிமாவைப் பொறுத்தவரை பாலிவுட்டில் இருக்கும் படங்கள் வெளியானதும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலைப் பெறும். இதற்கு காரணம் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பது மட்டுமே.

ஆனால், சமீபத்தில் வெளியான பாகுபலி 2 பல மொழிகளில் வெளியாகி பெத்த பெயரை பெற்றதற்கு காரணம் அதன் கிராஃபிக்ஸ் வேலை மட்டுமே. கதை சுமார் தான். ஆனால், பாகுபலி பெற்ற வசூல் என்பது 1500 கோடியைத் தொட்டது.

இந்த நிலையில், ரசிகர்களை கவர்வது நல்ல கதைகள் மட்டுமே என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது “தங்கல்” திரைப்படம்.

கடந்த வருடம் ரிலிசாகி நல்ல வசூலை வென்ற தங்கல் படம், சமீபத்தில் சீனாவில் ரிலீசானது.

அங்கே அந்தப்படம் வென்ற வசூல் எவ்வளவு தெரியுமா?

அமீர்கானின் தங்கல் இதுவரை ரூ.1719 கோடி வசூலித்துள்ளது. இதனால், ரூ.1700 கோடி வசூலித்த முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

சீன ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றிருக்கும் இப்படம் இன்னும் வசூல் வேட்டையாட காத்திருக்கிறது.