The fans were eagerly anticipated reel pair became real couple Who knows?

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த பாகுபலி ஜோடிகளான பிரபாஸ் - அனுஷ்கா ஜோடி ரியல் ஜோடி ஆனது.

அனுஷ்கா - பிரபாஸ் இருவரும் தங்களது பிறந்தநாளுக்கு மாறி மாறி காஸ்ட்லியான கிஃப்ட் கொடுத்து தங்களது காதலை வெளிப்படுத்தி உள்ளனர்.

ரசிகர்கள் பலரும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களோ நாங்கள் காதலிக்கவில்லை என்று கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நவம்பர் 7-ஆம் தேதி நடிகை அனுஷ்கா தனது 36-வது பிறந்த நாளை கொண்டாடினார். நடிகர் பிரபாஸ், அனுஷ்காவின் பிறந்தநாளுக்கு காஸ்ட்லி பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.

இந்த தகவல் வேகமாக பரவ ஆரம்பித்ததும் ரீல் ஜோடி ரியல் ஜோடி ஆகிவிட்டது என்றும் அனுஷ்காவும், பிரபாஸும் காதலிக்கின்றனர் என்றும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

அனுஷ்காவின் பிறந்தநாளுக்கு பிரபாஸ் கொடுத்த கிஃப்ட் பி.எம்.டபுள்.யூ கார். பிறந்தாநாளுக்கு விலையுயர்ந்த பரிசளித்து பிரபாஸ் - அனுஷ்கா தங்களது காதலை வெளியிப்படுத்தி உள்ளனர் என்றும், விரைவில் இவர் திருமணம் குறித்து நல்ல செய்தி வரும் என்றும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர் இவர்களது ரசிகர்கள்.