the fans of this director shown their love for him in ta grand manner
இயக்குனர் ரஞ்சித் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி கூட்டணியில், இரண்டாவதாக உருவாகி இருக்கும் திரைப்படம் ”காலா”. இத்திரைப்பம் நேற்று பல்வேறு தடைகளையும் மீறி, உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாகியது.

ரஜினி தூத்துக்குடி போராட்டம் குறித்து கூறிய கருத்துக்கள், அவருக்கு பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும், ”காலா” திரைப்படம் நல்ல விமர்சனங்களையே பெற்றிருக்கிறது. இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கும் ரஞ்சித், ரஜினிக்கான மசாலா படமாக இல்லாமல், மக்களுக்கான படமாக இதனை எடுத்திருக்கிறார்.

வெகு காலத்திற்கு பிறகு ரஜினியை மாஸ் ஹீரோவாக மட்டும் பார்க்காமல், ஒரு நல்ல நடிகனாக பார்க்க முடிகிறது. என்பது காலா படம் பார்த்த ரசிகர்களின் கருத்து. எப்போதும் ஒரு திரைப்படம் ரிலீசானால் நடிகருக்கு தான் பேனர், கட் அவுட் போன்ற மரியாதைகள் கிடைக்கும். ஆனால் முதல் முறையாக இயக்குனர் ரஞ்சித்துக்கு ரசிகர்கள் கட் அவுட் வைத்திருக்கின்றனர்.

அதுவும் மிக பிரம்மாண்டமான கட் அவுட். இது ரஞ்சித் மீது ரசிகர்களுக்கு இருக்கும் ஈர்ப்பை காட்டுகிறது. மேலும் ”காலா” படத்திற்கு எதிர்ப்பு எழுந்த போது கூட, எங்களால் ”காலா” படத்திற்கு ஆதரவு தர முடியாது. மன்னித்துவிடுங்கள் ரஞ்சித், என அவரது ரசிகர்கள் சிலர் கூறி இருந்தனர். வேறு சிலர் நாங்கள் ரஜினிக்காக இந்த படத்தை பார்க்கவில்லை. ரஞ்சித்துக்காக இந்த படத்தை பார்க்க போகிறோம் என தெரிவித்திருந்தனர்.

இவை எல்லாமே ரஞ்சித் மீதும் அவரது படைப்புகளின் மீதும் ரசிகர்கள் வைத்திருக்கும் பாசத்தையே காட்டுகிறது. ரஞ்சித்திற்காக ரசிகர்கள் வைத்திருக்கும் இந்த பிரம்மாண்டமான கட் அவுட்டை பார்த்து கோலிவுட் வட்டாரமே வியப்பில் ஆழ்ந்திருக்கிறது. ரஞ்சித்திற்காக வைக்கப்பட்டிருக்கும் இந்த கட் அவுட்டின் புகைப்படம் இப்போது இணையதளத்தில் வைரலாகி இருக்கிறது.
