The fans of Madurai release 100 feet poster for Simbu

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’.

இந்தப் படத்தில் ஸ்ரேயா, தமன்னா, சனாகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். சிம்புவின் இந்தப் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ள நிலையில் மதுரையிலுள்ள சிம்பு ரசிகர்கள் 100 அடி நீள போஸ்டரை ஒட்டி அசத்தியுள்ளனர்.

இந்த படம் உலகம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் சிம்புவின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்தப் படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை பொறுத்தே இரண்டாம் பாகத்தை தயாரிக்க தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளனர் என்பது கூடுதல் தகவல்.