the fans of another actor appreciates the good deed of this actor
நடிகர் விஜய் நேற்று இரவு தூத்துக்குடிக்கு சென்றிருந்தார். துப்பாக்கி சூட்டில் தங்கள் உறவுகளை இழந்து தவித்து வரும் மக்களுக்கு, நேரில் சென்று ஆறுதல் கூற அங்கு சென்ற விஜய், அவர்களில் ஒருவராக மாறி மிகவும் எளிமையாக நடந்து கொண்டார். அவர்களின் உறவுக்காரர்கள் எப்படி ஆறுதல் சொல்வார்களோ, அதே போன்ற ஒரு உணர்வை கொடுத்திருக்கிறது விஜய் நடந்து கொண்ட விதம்.

மேலும் அங்கு சென்ற விஜய் ஊடகங்களுக்கு தெரியாமல் தான் மக்களை சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் தனது ரசிகரின் பைக்கில் அமர்ந்து ஒவ்வொரு நபரின் வீட்டிற்கும் சென்றிருக்கிறார் விஜய். மற்றவர்களின் வரவை போல பரபரப்பு ஏற்படுத்தாமல் விஜய் வந்தது, உண்மையான ஆறுதலாக அமைந்திருக்கிறது பாதிக்கப்பட்ட மக்களுக்கு.

மேலும் அவர் அவர்களுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்வதாகவும் வாக்களித்திருக்கிறார். எதையும் ஊடக வெளிச்சத்திற்கு கொண்டுவந்து விளம்பரம் தேடாத, விஜயின் இந்த பண்பை பலரும் பாராட்டி இருக்கின்றனர். எதிரும் புதிருமாக இருக்கும் அஜீத், விஜய் ரசிகர்கள், ஒரு நல்ல காரியம் என்று வந்து விட்டால் எப்போதுமே இணைந்து தான் செயல்படுவார்கள். இப்போதும் கூட அதே மாதிரி தான். விஜய் செய்திருக்கும் இந்த நற்செயலை முழு மனதுடன் பாராட்டி இருக்கின்றனர் தல ரசிகர்கள்.
