ஒரே ஒரு போன் கால் சாமி மாதிரி வந்து காப்பாற்றிய கார்த்திக்!
Karthikai Deepam 2 Serial 1055 Episode : கார்த்திகை தீபம் 2 சீரியலில் என்னதான் தன்னை அத்தை வீட்டை விட்டு துரத்தினாலும், அவரது குடும்பத்தினருக்கு பிரச்சனை என்றதும் கார்த்திக் ஓடி வந்து காப்பாற்றியுள்ளார்.

கார்த்திக் மற்றும் ரேவதி - கார்த்திகை தீபம் 2
கார்த்திகை தீபம் 2 சீரியலில் இப்போது அதிகமாக பேசப்படுவது கார்த்திக் ஏன் உண்மையை சொன்னார் என்பது தான். அப்படி அவர் உண்மையை சொல்லாமல் இருந்திருந்தால் கும்பாபிஷேகம் நடந்திருக்கும். ஆனால், அவர் உண்மையை சொன்னதால் கும்பாபிஷேகம் நின்றது. அதோடு, ஊர் மக்களும் காப்பாற்றப்பட்டார்கள். வெடிகுண்டு வைத்த இடத்தை கண்டுபிடித்து கார்த்திக் ஊர் மக்களின் உயிரை காப்பாற்றினார்.
கார்த்திகை தீபம் 2
கார்த்திக் உண்மையை சொல்லவே சாமுண்டீஸ்வரி அவரை வீட்டைவிட்டு விரட்டியடித்தார். இனிமேல் இந்த வீட்டு பக்கமே வரக் கூடாது என்றார். இதனால் அதிகளவில் பாதிக்கப்பட்டது ரேவதி தான். ஆனால், ரேவதி தனது மகள் என்பதால் அவரை வீட்டைவிட்டு அனுப்பவில்லை. இதற்கும் ரசிகர்களிடமிருந்து விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் தான் கார்த்திகை தீபம் 2 சீரியலி 1055ஆவது எபிசோடில் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் காளியம்மாள்
ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் காளியம்மாள் இன்ஸ்பெக்டரிடம் போன் வாங்கி மாயாண்டிக்கு போன் போட்டு சாமுண்டீஸ்வரியை போட்டுத்தள்ள சொல்கிறார். அவரும் சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு சென்று அர்த்த ராத்திரியில் வீட்டு கதவை உடைக்க முயற்சிக்கிறார். ஆனால், அவரால் கதவை உடைக்க முடியவில்லை. பின்னர் தனது அடியாட்களை உடைக்க சொல்கிறார். அவர்களால் உடைக்க முடியவில்லை.
வீட்டு கதவை உடைக்கும் மாயாண்டி
வீட்டு கதவை உடைக்கும் சத்தம் கேட்டு, ரேவதி, மயில்வாகனம், சுவாதி, ரோகிணி, ராஜராஜன், சாமுண்டீஸ்வரி என்று எல்லோருமே எழுந்து ஹாலுக்கு வருகிறார்கள். வீட்டில் உள்ள அனைவரும் பீதியடைந்த நிலையில் போலீஸூக்கு ராஜராஜன் போன் போட சொல்கிறார். ஆனால், மயில்வாகனம், கார்த்திக்கிற்கு போன் போட்டு விஷயத்தை சொல்கிறார்.
கார்த்திகை தீபம் 1055ஆவது எபிசோடு
உடனே சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வந்த கார்த்திக்கை கண்டு அஞ்சி நடுங்கிய மாயாண்டி மற்றும் அவரது அடியாட்களை துவம்சம் செய்து அங்கிருந்து எஸ்கேப் ஆகிறார். இதைத் தொடர்ந்து கதவு உடைக்கும் சத்தம் நிற்கவும், வெளியில் வந்த பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது தான் மயில்வாகனம் கார்த்திக்கிற்கு போன் போட்டு வரச்சொன்னதாக சொல்லவே, அவருக்கு ஏன் போன் போட்டீங்க என்று சாமுண்டீஸ்வரி ஆதங்கப்படுகிறார்.
போட்டு கொடுத்த சந்திரகலா
பின்னர் வழக்கம் போல் சந்திரகலா இதுவும் நாடகமாக இருக்குமோ என்று கூறி கார்த்திக் மீது வீண் பழி போடுகிறார். நல்ல பெயர் எடுக்க கார்த்திக் ஆடிய நாடகம் என்று கூறுகிறார். இதற்கிடையில் வெடிகுண்டு வைத்தது நான் தான் என்று போலீஸில் ஒருவர் சரணடையவே காளியம்மாள், சிவனாண்டி ம்ற்றும் முத்துவேல் ஆகியோர் விடுதலை செய்யப்படுகின்றனர். அதோடு எபிசோடு முடியவே இனி நாளை என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.