நடிகையும் மாடலுமான மீரா மிதுனுக்கு, மக்கள் தரப்பில் அதிக ஆதரவு இருந்தும், இவர் 'கிராமத்து டாஸ்க்கின் போது, சேரன் தன்னுடைய இடுப்பை பிடித்து தூக்கினார் என அனைவர் மத்தியிலும் கூறி அவரை அசிங்கப்படுத்தினார். விளையாட்டின் போது எதிர்பாராமல் அவருடைய கை பட்டத்தை, மீரா இவ்வளவு பெரிய பிரச்சனையாக ஆக்கி இருக்க வேண்டாம் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாக இருந்தது.

இவரின் இந்த செயல், ரசிகர்களுக்கு அவர் மீது கோபத்தை வர வைத்தது. இதன் விளைவாக மீரா கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

இந்நிலையில் கடந்த வாரம் சேரனிடம் மீரா சண்டை வாங்கியது போல் தற்போது, நடிகர் சரவணன் சண்டை வாங்கியுள்ளார். முதல் பிரோமோவில், விஜயகாந்த் போல் சரவணன் நடனம் ஆடும் போது மட்டுமே இருந்ததாகவும் மற்ற நேரத்தில் அதே கேரக்டரில் இல்லை என கூறினார். இதனால் சேரனுக்கும் சரவணனுக்கு இடையே பெரிய பிரச்சனையே வெடித்தது.

இதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது பிரோமோவில், சேரனை லூசு மாதிரி பேசுகிறார் என சித்தப்பு அனைவர் மத்தியிலும் பேசுகிறார். சரவணன் பேசுவது தவறு என தர்ஷன், சாண்டி ஆகிய போட்டியாளர்கள் கூறியும் சரவணன் குரலை உயர்த்தி, நீ... வா...போ... என மரியாதை குறைவாக பேசியதால் அந்த இடத்தில் இருந்து எழுந்து செல்கிறார் சேரன்.  

சரவணன் இப்படி நடந்து கொள்வது, இவர் மீது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இருக்கும் இவரே ஒரு வேலை இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறலாம்.