the fan of famous Telugu actor is curious to know the meaning of the tattoo in his hand
சமந்தாவிற்கும் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவிற்கும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணமாகியது. திருமண வாழ்க்கை ஒரு பக்கம் இனிதாக போய்க்கொண்டிருக்க, சமந்தா ஒரு பக்கம் திரையுலக வாழ்க்கையிலும் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறார்.
அவரது திருமணத்துக்கு பின் தெலுங்கில் ரிலீசாகி இருக்கும் ரங்கஸ்தாலம் திரைப்படம், இப்போது தெலுங்கில் வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சமந்தா, நடிகர் ராம்சரணுடன் ஜோடி சேர்ந்து, ஒரு கிராமத்து பெண்ணாக திரையில் கலக்கி இருக்கிறார்.
சமந்தாவின் கணவர் நாக சைதன்யா தனது கையில் ஒரு டாட்டூ வரைந்திருக்கிறார். தூரத்தில் இருந்து பார்க்க ஒரு அம்பு போல தெரியும் இந்த டாட்டூவை உற்று நோக்கினால், அது ஏதோ ரகசிய கோட் மாதிரி தெரியும்.
அது என்ன என அறிவதில் ஆர்வம் கொண்ட ரசிகர் ஒருவர், டிவிட்டரில் வேடிக்கையான ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார் அதில்” சைதன்யாவின் கைகளில் இருக்கும் டாட்டூ மோர்ஸ் கோட் தானே?. அந்த டாட்டூ-ல் இருக்கும் மோர்ஸ் கோட், சமந்தாவை அவர் திருமணம் செய்து கொண்ட தினத்தை கூறிக்கிறது. அப்படி தானே? என கேட்டிருகிறார்.
அதற்கு பதிலளித்த சமந்தா “அந்த டாட்டூ என்ன சொல்ல வருகிறது என தெரிந்து கொள்ள ரொம்ப ஆர்வமாக இருக்கிறீர்கள் போல?” என பதில் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
