தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சமந்தா. பக்கா சென்னை பொண்ணான சமந்தா, மாஸ்கோவின் காவிரி என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் கால் வைத்தார். பாணா காத்தாடி, நான் ஈ, நீ தானே என் பொன் வசந்தம், அஞ்சான், கத்தி, தெறி உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். 

தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவும், சமந்தாவும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2017ம் ஆண்டு இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு திரையில் தோன்றாமல் இருந்த சமந்தா, "சூப்பர் டீலக்ஸ்" படம் மூலம் அதிரடி கம்பேக் கொடுத்தார்.

"அஞ்சான்" படத்தில் வில்லனாக நடித்த மனோஜ் பாஜ்பாய் "த பேமிலி மேன்" என்ற வெப் சீரிஸுல் நடித்தார். அமேசான் பிரைமில் வெளியான இந்த சீரியல் நல்ல வரவேற்பு பெற்றது. இதன் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முடிவு செய்த தயாரிப்பாளர் கதையை சமந்தாவிடம் கூறியுள்ளார். கதை மிகவும் பிடித்ததால் "த பேமிலி மேன்" இரண்டாம் பாகத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட்டார் சமந்தா. மேலும் இந்த வெப் சிரீஸுல் சமந்தா வில்லியாக நடிக்கிறார். அதுவும் தீவிரவாதியாக நடிக்க உள்ளார். 

இந்த வெப் தொடரில் சமந்தாவுடன் பிரியாமணி, சந்தீப் கிஷன் உள்ளிட்டோரும் நடிக்க உள்ளனர். இதுவரை ஹீரோயினாக வலம் வந்த சமந்தா வில்லியாக ரசிகர்களை மிரட்ட உள்ளார்.