நடிப்பு திறமை, தொழில் நுட்ப அறிவு, இசை, நடனம், பாடல், இயக்கம் என சினிமாவின் சகல துறைகளிலும் கலக்கி வருவதால் கொண்டாடப்பட வேண்டிய சிம்பு சர்ச்சைகளில் சிக்கி சறுக்கி வருகிறார். 

கடந்த ஒரு வார காலமாக, சிம்பு நடிக்கும் ‘மாநாடு படம் ரிலீசாகாது’, சிம்பு ‘சனி ஞாயிறுகளில் ஷூட்டிங் வரமாட்டார்’ என்று தகவல் வெளியாகி சிம்புவுக்கு வம்பாகி விட்டது.

 

ஆனால், உண்மை அதுவல்ல என்கிறார்கள். சிம்பு இப்போது மட்டுமல்ல எப்போதுமே அப்படி ஒரு கட்டுப்பாட்டை எந்தத் தயாரிப்பாளர்களிடமும் விதித்ததில்லை. அந்த வதந்தி பரவக் காரணம் சிம்புவின் உதவியாளர்கள் கம் நெருங்கிய நண்பர்களான தீபன் பூபதி, தேவராஜ்  என இருவரும் தான். சிம்புவுடன் 24 மணி நேரமும் ஒட்டிக் கொண்டே இருப்பார்கள்.  சிம்புவிற்கு எல்லாமுமாய் இருந்து வந்தார்கள். எந்த படம், எப்போ ஷூட்டிங், எவ்வளவு சம்பளம் என்பதில் ஆரம்பித்து சிம்புவின் கால்ஷீட் பார்ப்பதும் இவர்கள் தான்.
சிம்புவின் பெயரைச் சொல்லி பல தயாரிப்பாளர்களிடம் கால்ஷீட் தருவதாகச் சொல்லி அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார்கள். இதெல்லாமே சிம்புவுக்கு தெரியாது. சிம்புவின் காதுக்கே விஷயம் தெரியாமல் தயாரிப்பாளர்களும் சிம்பு படம் பண்ணுவதாக இவர்களிடம் அட்வான்ஸ் பணம் கொடுத்து ஏமாந்திருக்கிறார்கள்.இரவு முழுவதும் பார்ட்டியில் குடித்து விட்டு, அடுத்த நாள் ஷூட்டிங் இருந்தால், ‘சிம்பு இன்னைக்கு ஷூட்டிங் வரமாட்டார்’ என்று சிம்புவின் பெயரைக் தொடர்ந்து பஞ்சராக்கியிருக்கிறார்கள்.  தயாரிப்பாளர்கள்  கொடுத்த பணம், சிம்புவின் பாக்கெட்டுக்குப் போகாது. மாறாக தீபன் பூபதியும், தேவராஜும் அதை அப்படியே ஆட்டையைப் போட்டு விடுகின்றனர். இது தான் உச்சக்கட்ட மோசடி. இவர்களால் தான் அப்பாவி சிம்புவின் பெயர் தொடர்ந்து கெடுகிறது என்று நலம் விரும்பிகள் சிம்புவிடம் எடுத்துச் சொன்னார்களாம்.

இதன் பிறகு தான் எல்லா அதிரடியுமே அரங்கேறியது. சும்மாவே தலையை சிலுக்கிக் கொண்டு வார்த்தைகளில் சலங்கை கட்டி ஆடும் டி.ஆர். காதுக்கு விஷயத்தை சிம்பு சொல்ல, தனது பாணியில் தீபன் பூபதியையும், தேவராஜையும் துரத்திவிட்டார் டி.ஆர்.

இப்போது சிம்புவின் கால்ஷீட்டை டி.ஆரும், அவரது மனைவியும் தங்கை இலக்கியாவும் பார்த்து கொள்கிறார்கள். வழக்கம் போல டி.ஆர். சிம்புவின் ஜாதக கட்டங்களை வைத்து சோழி உருட்ட ஆரம்பித்திருக்கிறார். சென்ற 18ம் தேதியோடு சிம்பு திரையுலகில் அடியெடுத்து வைத்து 35 ஆண்டுகள் ஆகிறதாம். அன்றோடு சிம்புவைச் சுற்றியிருந்த தீய சக்திகள் எல்லாமே துரத்தப்பட்டு விட்டது.. இனி சிம்புவுக்கு எப்போதுமே ஏறுமுகம் தான் என்று சொல்லிவருகிறார் டி.ஆர்.