Breaking : இந்திய குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது
சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது இந்தியாவின் தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் என்கிற குறும்படம்.
95-வது ஆஸ்கர் விழாவில் இந்தியா சார்பில் போட்டியிட்ட தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் என்கிற குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. சிறந்த ஆவண குறும்படம் என்கிற பிரிவில் போட்டியிட்ட இந்த குறும்படம் ஆஸ்கர் விருதை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. கார்டிகி கான்சால்வ்ஸ் மற்றும் குனீத் மோங்கா ஆகியோர் இவ்விருதை பெற்றுக்கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் தாயை பிரிந்து தவித்த பிறந்து 3 மாதங்களே ஆன ரகு என்கிற குட்டி யானையும், சத்தியமங்கலம் வனத்தில் தாயை பிரிந்து தவித்த அம்முக்குட்டி என்கிற பொம்மி யானையும் முதுமலை வளர்ப்பு முகாமுக்கு கொண்டுவரப்பட்டு. அதனை பராமரிக்கும் பொறுப்பு பொம்மன் - பெள்ளி என்ற பாகன் தம்பதிகளிடம் வனத்துறை ஒப்படைத்தது.
இந்த இரு யானைகளையும் தங்களது பிள்ளைகள் போல் வளர்த்த பொம்மன், பெள்ளி தம்பதியை மையமாக வைத்து தான் தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் என்கிற ஆவண குறும்படம் எடுக்கப்பட்டது. இந்த ஆவணப்படத்தை கடந்த 2 ஆண்டுகளாக ஊட்டியில் தங்கி படமாக்கி இருந்தார் மும்பையை சேர்ந்த கார்த்திகி கொன்சால்வெஸ் என்ற பெண் இயக்குனர். தற்போது தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் என்கிற ஆவண குறும்படத்திற்கு சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு உள்ளது.