Asianet News TamilAsianet News Tamil

விஜய் டிவியால் கட் பண்ணித் தூக்கப்பட்ட கமல் ரஜினி உரையாடல்... என்னங்க நடக்குது இந்த பிக்பாஸ்ல?...

விஜய் டி.வியின் பிக்பாஸ் சர்ச்சைகளை பல சமயங்களில் அந்த சானலே உருவாக்கிவிட்டு விளம்பரத்துக்காக குளிர்காய்வதுண்டு. அதன் ஒரு தொடர்ச்சியாக கமலுக்கும் சேரனுக்கும் நடுவே ரஜினி பற்றி நடந்த உரையாடல் இருட்டடிப்பு செய்யப்பட்டதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ளார்.

the edited dialogue portions in big boss programme
Author
Chennai, First Published Aug 6, 2019, 3:48 PM IST

விஜய் டி.வியின் பிக்பாஸ் சர்ச்சைகளை பல சமயங்களில் அந்த சானலே உருவாக்கிவிட்டு விளம்பரத்துக்காக குளிர்காய்வதுண்டு. அதன் ஒரு தொடர்ச்சியாக கமலுக்கும் சேரனுக்கும் நடுவே ரஜினி பற்றி நடந்த உரையாடல் இருட்டடிப்பு செய்யப்பட்டதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ளார்.the edited dialogue portions in big boss programme

அந்த உரையாடல் இதோ...பிக் பாஸ்: ஒரு குறும்பட உரையாடல் (ஒரு நீக்கப்பட்ட உரையாடல் )

நம்மவரிடம் எல்லார் கேட்ட கேள்வியும் வந்துருச்சு, ஆனா முக்கியமான கேள்வியை விஜய் டிவிகாரங்க ஏன் எடுத்தாங்கனு தெரியலை.

தர்ஷன் கேட்ட கேள்விக்கு தான் சொல்லும் பதில் வெளிய வராது. அதை channel அனுமதிக்காதுனு கமல் சாரே சொன்னாரு. ஆனா சேரன் கேட்ட கேள்வியையும் அதற்கு கமல் சார் சொன்ன பதிலையும் ஏன் எடுக்கணும்?? சேரன் ரஜினியாக கேட்ட கேள்விக்கும், கமல் சார் சொன்ன பதிலுக்கும் கை தட்டிய ரசிகனாக எனக்கு அது புரியவேயில்லை.

சேரன் கமல்ஹாசனிடம் கேட்டது : வணக்கம் கமல் , நல்லா இருக்கீங்களா? எனக்கு சில அரசியல் கேள்விகள் உங்ககிட்ட இருக்கு. நானும் நீங்களும் ஒரு 40 வருஷம் நடிகர்களாக பயணம் பண்ணிட்டோம். நாம நடிகர்களாக இருந்தப்போ மக்கள் நம்ம கிட்ட என்ன கேட்டார்களோ அத முடிஞ்ச வரைக்கு சிறப்பா குடுத்துருக்கோம் . இப்போ நானும் அரசியில் குதிக்க நினைச்சிட்டிருக்கேன் , நீங்க குதிச்சிடீங்க! நடிகர்களாக இருந்து அவங்கள திருப்திபடுத்திய நாம, அரசியல் தலைவர்களாக மாறி , அந்த மக்களின் எதிர்பார்ப்புகள் திருப்தி அடைகிற மாதிரி வேலை செய்ய முடியுமா?

நம்மவர் : அவங்க எதிர்பார்ப்பதில் ஒன்று இப்படி நானும் நீங்களும் பேசிக்கிட்டு இருக்கிறோம் என்பது தான் .முடியுமான்னு கேட்டீங்கன்னா , முனைந்தால் முடியும். அதற்கு , நான் என்பது நாமானால் கண்டிப்பாக முடியும். இது இந்த ரஜினி(சேரன்) வந்தாலும் சொல்லுவேன், அந்த ரஜினி வந்தாலும் சொல்லுவேன்

கோமாளி trailer பாத்துட்டு கமல்ஹாசன் ரஜினிகாந்த்தை support பண்ணதை English channels news-ஆக போடும் போது இதை எதுக்காக edit பண்ணனும். இதில் அரசியல் தெரியலை. நட்பும், அதன் மரியாதையும் தான் தெரியுது. இலங்கை விஷயத்துல தர்ஷன் கேட்ட கேள்வியும் தப்பா எதுவுமே இல்லையே.the edited dialogue portions in big boss programme

தர்ஷன்: இந்த அசல் உலகநாயகன் கிட்ட இந்த போலி உலகநாயகன் கேக்குற கேள்வி – ஈழத்தில் இருக்குற தமிழர்கள் எல்லாம் கமல் சாரை தங்களில் ஒருவராகத்தான் பார்ப்பார்கள் , அதுக்கு நிறைய காரணங்கள் இருக்குறது. கமல் சாருடைய அதீத நடிப்பு , விடா முயற்சி , விஸ்வரூபம் இப்படினு சொல்லிட்டு போகலாம் . But முக்கியமாக பாக்குற விஷயம் என்னென்னா சினிமாவில ஈழத்து மக்களுடைய பிரச்சனைய முதன்முதல்ல தைரியமா தெனாலி மூலம் இந்த உலகத்துக்கு எடுத்து காட்டின ஆள் நீங்கதான். இப்போ நீங்கள் மக்களின் தலைவரா இருக்கீங்க , இந்த சமயத்துல அந்த மக்களுக்கு சொல்லவேண்டிய ஒரு advice அல்லது ஒரு செய்தி ? ஏதுவாக இருந்தாலும் share பண்ணிக்கலாம்

நம்மவர் :தெய்வம் நின்று கொல்லும் அரசன் அன்று கொல்வான்னு சொல்லுவாங்க. அன்று கொல்வது அரசனின் வேலை இல்ல, அது ஒரு மிக மோசமான முன் உதாரணம். அரசுக்கு மோசமான முன் உதாரணம் உங்களுக்கு முன்பு இருந்த அரசு.
அத நீ ஏன் சொல்லி காட்டல அப்படினா , அப்போ நாங்க அரசு இல்ல,தெனாலி . கோமாளிதனமா நின்னு இந்த பக்கத்தையும் அந்த பக்கத்தையும் பார்த்துகிட்டு இருந்தோம் . ஏதாவது உதவி போயி சேரும் அப்பிடின்னு நம்பிக்கிட்டு இருந்தோம் . இப்படி போனா தேச விரோதம் , அப்படி போனா தமிழனுக்கு துரோகம் . என்ன பண்றதுனே தெரியாம முழிச்சிகிட்டு இருந்த நேரம் அது. இது நான் வந்து நேர்மையாக சொல்லும் விஷயம். நல்ல அரசு இருந்திருந்தால் இந்த கதி நேர்ந்துருக்காது என்று நம்பும் ஒரு சிலரில் நானும் ஒருவன் . நான் சொல்வது இரண்டு நாடுகளிலும் . இது உலக தமிழனின் குரல், சென்னை தமிழனின் குரல் அல்ல . இது இந்த அரங்கத்தையும் தாண்டி வெளியே செல்ல வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் . ஆனால் கம்பெனிக்கு என்று சில சட்ட திட்டங்கள் இருக்கலாம் , பயம் இருக்கலாம் . வியாபார பயங்கள் இருக்கலாம் , அதையும் கடந்து அவர்கள் எங்கே தன்னை வாழவைத்து கொண்டு இருக்கிறார்களோ அந்த மக்களுக்காகவாவது இதை அங்கே கடத்த வேண்டும் என்பது என்னுடைய ஆசை

 

Follow Us:
Download App:
  • android
  • ios