கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற நிலையில் தன்னை தன் மகள் டேட்டிங் தளத்தில் சேர்த்துவிட்டதாகவும், அதன் பின் ஒருவருன் தான் ஒரு வருணம் வரை தொடர்பில் இருந்ததாகவும் பிரபல நடிகை சுசித்ரா அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற நிலையில் தன்னை தன் மகள் டேட்டிங் தளத்தில் சேர்த்துவிட்டதாகவும், அதன் பின் ஒருவருன் தான் ஒரு வருணம் வரை தொடர்பில் இருந்ததாகவும் பிரபல நடிகை சுசித்ரா அதிர்ச்சி தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்து பலரையும் வாயடைக்க வைத்துள்ளது. இளம் வயது பெண்கள் முதல் திருமண மாணவர்கள் வரை பலரும் டேட்டிங் தளத்தில் இணைந்து தங்களது நாட்களை உல்லாசமாக கழித்து வருகின்றனர். இது ஒருபுறம் சமூக கலாச்சார சீரழிவு எதிர்பார்க்கப்படுகின்றது என்ற விமர்சனம் இருந்து வருகிறது. இந்நிலையில் விவாகரத்தான தாயை டேட்டிங் தளத்தில் மகள் வற்புறுத்தி சேர்த்துள்ளதை அவரின் அம்மாவே ஓபனாக பேசியுள்ளார். அதன் மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நடிகை சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி சின்னத்திரை மூலம் அறியப்பட்டவர், ' கபி ஹா கபி நா' ஷாருக்கான் மற்றும் தீபக் திஜோரி ஆகியோருடன் படத்தில் நடித்துள்ளார் இவர். சேகர் கபூர் என்ற தயாரிப்பாளரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு காவிரி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் 2006ஆம் ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்றனர், தற்போது மகள் காவிரியுடன் நடிகை சுசித்ரா வசித்து வருகிறார். விரைவில் காவிரி பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமாக உள்ளார். இந்நிலையில் என்டர்டெயின்மென்ட் டிஜிட்டல் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த சுசித்ரா தனக்கும் தன் மகளுக்கும் உள்ள உறவை சுவாரஸ்யமாக விவரித்துள்ளார். அதில், ஒற்றைத் தாயாக இருந்து தன் மகளை வளர்த்த தான் அவளிடம் பெரிய கண்டிப்புகளை காட்டவில்லை, நான் விவாகரத்து பெற்ற உடன் என்னை டேட்டிங் தளத்தில் சேரும்படி மகள் வற்புறுத்தினார்.
தனது மகள் காவேரி தனது பெயரை டேட்டிங் தளத்தில் சேர்த்துவிட்டார், ஆனால் அது எனக்குப் பிடிக்கவில்லை, அதில் தனது நண்பர்களையும் அவர் இணைத்து விட்டார், அதேபோல் என்னுடன் சில டேட்டிங் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார். தொடர்ந்து அவள் என்னை வற்புறுத்திக் கொண்டே இருந்தாள், ஆனால் எனக்கு அதில் ஈடுபாடு இல்லை, மிக சலிப்பாக இருந்தது, உனக்காகத்தானே நான் டேட்டிங் குரூப்பில் என்னை சேர்த்தேன் இப்போது எதற்காக மறுக்கிறாய் என்று என்னிடம் அவர் கேள்வி எழுப்பினாள், ஆனால் அற்பத்தனமான அந்த விஷயத்தை செய்ய எனக்கு பிடிக்கவில்லை. உனக்காகத்தான் நான் அதில் சேர்ந்தேன் என அவளிடம் நான் ஓபனாக கூறினேன். ஆனால் இனிமேலும் அதை செய்ய முடியாது என நான் மறுத்து விட்டேன்.

சேகரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பிறகு தனக்கு ஒரு வருடம் நீடித்த ஒரு உறவு இருந்தது என்பதையும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார். ஆனால் அது பற்றி யாருக்கும் தெரியாது என்றும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே ஷாருக்கானும் சுசித்ரா இருவரும் ஒன்றாக நடித்துள்ளதால், ஷாருக்வுடன் தொடர்பு இருக்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் இல்லை என அவர் மறுத்துள்ளார்.
