ஓவியா நடிக்கும் படத்திற்கு இருட்டு அறையில் முரட்டு குத்து என்று தலைப்பிட பட்டுள்ளது.

நடிகை ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் வீட்டில் இருந்து வெளியேறிய பின்பு மீண்டும் அந்தப் போட்டியில் பங்கேற்க விருப்பம் இல்லை என்று அதிரடியாக தெரிவித்து விட்டார்.

மேலும், தனது ஸ்டேட்டஸை சிங்கிள் என்று போட்டு கெத்து காட்டியுள்ள நிலையில் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்த இருப்பதாகவும் தெரிவித்து ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடித்த ‘ஹரஹர மகாதேவகி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.

இதில், இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் அடுத்தப் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது.

அந்தப் படத்தின் தலைப்புதான் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து”.

அந்தப் படத்திலும் கதாநாயகனாக கௌதம் கார்த்திக் நடிக்க இருப்பதாகவும், அவருக்கு ஜோடியாக ஓவியாவை நடிக்கை வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் ஓவியா ஓகே கூறியுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.