the crew members surprised to see the simplicity of ultimate star
அல்டிமேட் ஸ்டார் அஜீத் விவேகம் படத்தை தொடர்ந்து, அடுத்ததாக நடித்துவரும் திரைப்படம் விசுவாசம். இந்த திரைப்படத்தை விவேகம், வீரம், வேதாளம் போன்ற படங்களை இயக்கிய, சிறுத்தை சிவா தான் இயக்குகிறார். விசுவாசம் திரைப்படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் வைத்து தொடங்கியது.

அதனை அடுத்து ஹைதராபாத்தில் படப்பிடிப்பு முடிந்து, இப்போது ஓய்விற்கு சென்னை வந்திருக்கிறது படக்குழு. இந்த படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றிருந்தபோது, அஜீத் தங்குவதற்காக பிரபல ஹோட்டல் ஒன்றில் வழக்கமாக அவருக்கு புக் செய்யும் ஸ்டார் அறையை ,புக் செய்ய முயன்றிருக்கின்றனர் படக்குழுவினர்.

அந்த சமயத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், ஒரு படப்பிடிப்பு காரணமாக அங்கு வந்திருந்ததால், அவருக்காக ஏற்கனவே அந்த அறையை புக் செய்திருக்கின்றனர் அவரது ஆட்கள்.
இதனால் அஜீத் வழக்கமாக தங்கும் அறை அவருக்கு கிடைக்காமல் போய் விட்டது. இதனை வருத்தத்துடன் அஜீத்திடம் தெரிவித்திருக்கின்றனர் படக்குழுவினர். அதற்கு அஜீத் எனக்கு ஒரு ஃபேன், ஒரு படுக்கை இருந்தால் போதும். நான் சமாளித்துக் கொள்வேன். என தன்னடக்கத்துடன் பதில் கூறி இருக்கிறார்.

ஓரிரு படங்களில் நடித்த நடிகர், நடிகைகள் கூட எக்கச்சக்கமான டிமாண்டுகள் வைக்கும் காலத்தில், அஜீத் இவ்வளவு தன்னடக்கமாக நடந்து கொண்டது, படக்குழுவினருக்கு ஆச்சரியத்தை அளித்திருக்கிறது. அவரின் இந்த குணம் தான், அவரை இந்த அளவு உயரத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. என புகழ்ந்திருக்கின்றனர் அஜீத்தின் இந்த செயலை அறிந்தவர்கள்.
