The argument is because of the girl by Jyothika


நாச்சியார்

பிரபல இயக்குநர் பாலா இயக்க ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் குமார், ராக்லைன் வெங்கடேஷ் உள்பட பலர் நடித்துள்ள படம் நாச்சியார். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் முடிவடைந்து விட்டது. மேலும் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இந்த படத்தை பாலாவின் B ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

டீசர்

இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் அந்த டீசரில் ஜோதிகா பேசிய கெட்ட வார்த்தைதான் உறுத்தியது. அது சமூக வலைத்தளங்களில் மிகுந்த விமர்சனத்துக்கும் உள்ளானது. இது தொடர்பாக ஜோதிகா சமீபத்தில் விளக்கமளித்துள்ளார். அதில்....

பெண் என்பதால் விவாதம்

நாச்சியார் டீசரில் நான் பேசியது கெட்ட வார்த்தைதான்.நான் மறுக்கவில்லை. ஆனால் அந்த வார்த்தையை நிறைய படங்களில் நிறைய ஆண்கள் பேசியிருக்கிறார்கள். ஒரு பெண் முதல்முறையாக அந்த வார்த்தையை பேசுவதால் அது விவாத பொருளாக மாறியது.

ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள்

படத்தில் கதாபாத்திரத்துக்கு ஏற்ற வசனம் அது. இன்னும் கொஞ்சம் டயலாக் சேர்த்து பேசணும். ஆனால் நான் கொஞ்சம் குறைத்து பேசியிருக்கிறேன். படத்தில் குறிப்பிட்ட சூழலில், இந்த வசனம் வரும் போது ரசிகர்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.