தொலைக்காட்சி நடிகையான ரெனீ தயானி, தன்னுடன் பணிபுரிந்த முன்னணி நடிகர் தன்னிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக புகார் கூறியுள்ளார். 

டெல்லியைச் சேர்ந்த ரெனீ தயானி.கசம் தேரே பியார் கீ, எம்.டி.வி. ரோடீஸ் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார். இவர், தன்னுடன் பணிபுரிந்த முன்னணி நடிகரால் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை மி டூ இயக்கம் வாயிலாக மனம் திறந்து பேசியுள்ளார். 2016 ஆம் ஆண்டு ஒரு விருந்தில் நடைபெற்ற இச்சம்பவத்தை பேட்டி ஒன்றில் அதிர்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் ரெனி தயானி. 

ஒரு விருந்திற்குச் சென்ற போது அந்த பிரபல நடிகர் அவரது தோழியையும், தோழியின் தங்கையையும் உடன் அழைத்து வந்ததாகக் கூறினார். அனைவரும் மது போதையில் ஆடிக் கொண்டிருந்ததாகவும் தயானி தெரிவித்தார். அப்போது திடீரென அந்த நடிகர், தனது முகத்துக்கு நேராக அவரது இடுப்புக்குக் கீழ் பகுதி இருக்கும் வண்ணம் வைத்துக் கொண்டு அசைத்தபடி தவறாக பேசியதாக குறிப்பிட்டார் ரெனீ. 

இதனால் அதிர்ச்சி அடைந்த தாம், அவன் என்ன செய்கிறான் என்று ஒரு நொடி அதிர்ந்து போய் விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதைக் கண்ட நிகழ்ச்சியின் இயக்குனர் ஒருவர், ரெனீ எதுவும் பேசாமல் அமைதியாக இரு என்று கண்டித்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் இதை சும்மா விடப் போவதில்லை என்று சீறிய தாம், உன்னுடைய தோழியையும், தோழியின் தங்கையையும் வைத்துக் கொண்டு இதுபோன்று கேட்பாயா என்று ஆக்ரோசத்துடன் கூச்சலிட்டதாக தியானி கூறியுள்ளார். உன்னுடைய தோழியை இதுபோல் செய்யச் சொல் என்று கூறியதாகவும் தெரிவித்தார். 

நடிகரின் மோசமான குணத்தால் அவரது முதல் தோழியும், இரண்டாவது தோழியும் தற்போது அவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாக தியானி குறிப்பிட்டுள்ளார்.  இந்த சம்பவத்திற்கு பின்னர் அந்த நடிகருடனான தொடர்பை முற்றிலும் துண்டித்த ரீனா தியான், பேஸ்புக்கிலும் இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டதாகவும், ஆனால் நண்பர்கள் சிலர் கேட்டுக் கொண்டதால் அதை நீக்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

ஆனால் அந்த நடிகரின் பெயரைக் குறிப்பிட்ட தியானி, ஆனால் அதை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதன் காரணமாக நடிகரின் பெயர் வெளியிடப்படவில்லை.