பிரபல தயாரிப்பாளரை முறைத்துக் கொண்ட ’லிப்லாக்’ நடிகை....டோலிவுட்டை அதிரவைத்த சம்பவம்...!

நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும், தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட உரசல் டோலிவுட்டில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. ”கீதா கோவிந்தம்” என்ற தெலுங்கு படம் மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, அந்த ஒரே படத்தில் இந்தியா முழுவதும் பிரபலமானார். அந்த படத்தில் இடம் பெற்ற ’இங்க்கம், இங்க்கம்’ படலுக்கு டிக்டாக் பண்ணாத பெண்களே இல்லை என்னும் அளவிற்கு ஒரே பாடலில் உலக புகழ் பெற்றார் ராஷ்மிகா. அதில் ராஷ்மிகா, விஜய் தேவகொண்டாவுடன் ’லிப்லாக்’ சீனில் நடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். 

அவ்வளவு தான் தென்னிந்திய முன்னணி நடிகர்கள் ராஷ்மிகாவை தங்களது படங்களில் நடிக்க வைக்க போட்டி போட ஆரம்பிச்சாங்க. இப்போ பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் "சுல்தான்" படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ’விஜய் 64’ படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகாவை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில், தெலுங்கில் சசி இயக்கத்தில் சமந்தாவின் கணவர் நாக சைதன்யாவுடன் ஜோடி சேர ராஷ்மிகாவை, பிரபல டோலிவுட் இயக்குநரான தில் ராஜு கேட்டிருக்கார். அதற்கு ராஷ்மிகா பெரும் தொகை கேட்டதா தகவல் வெளியாகியிருக்கு. இதனால் கடுப்பான தில் ராஜு, நீங்க என் படத்தில் நடிக்கவே வேண்டாம், உங்க திசைக்கு ஒரு கும்பிடுன்னு சொல்லிட்டு கிளம்பிட்டாராம்.

இப்போ அந்த படத்திற்கு வேற ஹீரோயின் தேடிக்கிட்டு இருக்கிற நிலையில, நடிக்க வந்து 3 வருஷம் கூட ஆகல. அதுக்குள்ள இப்படி பிரபல தயாரிப்பாளர் கொடுத்த ஆஃபரை தட்டிக் கழிக்கலாமன்னு டோலிவுட் வட்டாரங்கள் ராஷ்மிகாவை வறுத்தெடுத்துக்கிட்டு இருக்காங்க.