The 2nd Making Video Release of the 2.0 movie with the most adventurous scenes ...

ரஜினி, அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள 2.0 படத்தின் இரண்டாவது மேக்கிங் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. அதுவும் 3டியில் .

இந்திய சினிமாவின் டாப் 5 இயக்குனர்களில் ஒருவர் சங்கர். பிரம்மாண்டத்திற்கு பேர் போனவர்.

இவரது இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 2.0.

இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ள நிலையில் அப்படத்தின் முதல் மேக்கிங்க் வீடியோ வெளியானது. முதல் மேக்கிங் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது

தற்போது இந்தப் படத்தின் 2-வது மேக்கிங் வீடியோ வெளியாகவுள்ளது. இன்று இப்படத்தின் 2-வது மேக்கிங் வீடியோ வெளிவரவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில் அதிக சாகச காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.