நடிகையும், மாடலுமான சனம் ஷெட்டி, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தன்னுடைய காதலர், தர்ஷன் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் முன் தன்னை திருமணம் செய்து கொள்ள நிச்சயதார்த்தம் செய்து கொண்டு, இப்போது திருமணம் செய்ய மறுப்பதாக பரபரப்பு புகார் கூறினார்.

மேலும், அவருடைய வளர்ச்சிக்கு காரணம் நான் என்பதை தர்ஷன் மறந்து விட்டதாகவும், தர்ஷனுக்கு இதுவரை 15 லட்சம் வரை செலவு செய்திருப்பதாக தெரிவித்தார்.

சனம் ஷெட்டியின் புகாரை தொடர்ந்து, தர்ஷனும் அவருடைய தரப்பு நியாயத்தை பிரஸ் மீட் வைத்து கூறினார். 

இருப்பினும், சனம் ஷெட்டியின் புகாருக்கு பல ஆதாரங்கள் உள்ளதாகவும், தர்ஷன் மீது நான்கு வழக்குகள் பதிவு செய்துள்ளதாக, சனம் ஷெட்டியின் வழக்கறிஞர் தெரிவித்தார். அதே நேரத்தில் தர்ஷனுக்கு ஏழு ஆண்டுகள் வரை, சிறைத்தண்டனை கிடைக்கவும் வாய்ப்புதாக கூறி இருந்தார்.

இதை தொடர்ந்து, தர்ஷன் அவருடைய தரப்பில் இருந்து... முன் ஜாமீன் பெற, நீதி மன்றத்தை அணுகியபோது... நீதி மன்றம் அவருக்கு முன் ஜாமீன் தர மறுத்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

சனம் ஷெட்டியின் வழக்கிலும் சரி, பட விஷயத்திலும் சரி... தர்ஷனுக்கு ஆரம்பமே சறுக்கி இருக்கிறது. நீதி மன்றமும் அவருக்கு அதிர்ச்சி தீர்ப்பை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.