இயக்குனர் ராம் இயக்கத்தில், ஜெ.எஸ்.கே கார்பரேஷன் தயாரித்துள்ள படம் தரமணி. இந்த படத்தில் கதாநாயகனாக, வசந்த் ரவி என்கிற புது முகம் நடித்துள்ளார் . நாயகிகளாக ஆண்ட்ரியா , அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் இசையை, மறைந்த பாடலாசிரியர் நா.முத்துகுமாருக்கு சமர்ப்பணம் செய்யும் விதத்தில், யுவன் ஷங்கர் ராஜா ரஜினியிடம் கேட்டுக்கொண்டதால் , இந்த படத்தின் பாடலை வெளியிட ரஜினி சம்மதித்தார்.

மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த பாடல்களை 'ப்ரம்  தி பாட்டம் ஆப் அவர் ஹார்ட்' என்கிற காணொளியை உருவாக்கி , படத்தின் பாடல்களை யு டியுபில் வெளியிட்டனர்.

பாடல்கள் வெளியிட பட்ட சில மணி நேரங்களிலேயே பல பார்வையாளர்கள் படங்களை கேட்டு நல்ல ரிசல்ட் கூறியுள்ளனர்.

இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் ராம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்  பாடல்களை வெளியிட்டது தங்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது என்றும், இந்த படத்தின்  பாடங்களை தனது மறைந்த நண்பர் நா.முத்துக்குமாருக்கு சமர்ப்பணம் செய்வதாக தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பேசிய யுவன் ஷங்கர் ராஜா என்னுடைய பயணத்தில் மிக முக்கியமான மைல் கல் என கூறினார். 

இப்போது வெளியாகியுள்ள தரமணி பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது .