தமிழ் சினிமாவில் 30 க்கும் மேற்பட்ட படங்களை தன்னுடைய ஒளிப்பதிவின் மூலம் அழகாக காட்டியவர், தேசிய விருது வென்ற தங்கர்பச்சான். 

மேலும், அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், அம்மாவின் கைப்பேசி, உள்ளிட்ட ரசிகர்கள் மனதில் இருந்து நீங்காத படங்களை  இயக்கியவர். எதார்த்தமான கிராமப்புற படங்களை இயக்குவதில் ஆர்வம் கொண்ட இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான 'களவாடிய பொழுதுகள்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

இந்த படத்தை தொடர்ந்து சில காலம் இயக்குவதில் இருந்து விலகியே இருந்த இவர், தற்போது இவருடைய மகன் விஜித்தை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார்.  இந்த படத்தில் மிலான நாகராஜ், அஸ்வினி, என இரண்டு புதிய கதாநாயகிகள் அறிமுகமாக உள்ளனர்.

இவர்களை தவிர முக்கிய கதாபாத்திரத்தில் டான்ஸ் மாஸ்டர் தினேஷ், மன்சூரலிகான், உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் குமார் இசையமைக்கிறார். பிரபு தயாளன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை பிஎஸ்என் என்டர்டைன்மெண்ட்  என்கிற நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க மாறுபட்ட நகைச்சுவை கலந்த படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை முன்னாள் மேயர் சைதை துரைசாமி துவங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.