வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு, முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளை செய்து வருவதின் மூலம் கேரள மக்களின் இதயங்களில் இடம்  பிடித்துள்ளனர் விஜய் ரசிகர்கள்

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு 
உணவு, உடை, குடிநீர், போர்வை உள்ளிட்ட  பொருட்களை வழங்கி வெறும் பேச்சளவில் மட்டும் அல்லாமல் செயலிலும் தாங்கள் யார் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர் விஜய் ரசிகர்கள். 

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனத்த மழை பெய்து வருகிறது இதனால் கேரளாவில் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது, திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்காடாகவே காட்சியளிக்க்றது. தொடர் கனமழையின் காரணமாக கேரளாவின் மலப்புரம், வயநாடு,கொச்சி, கண்ணூர், கோழிக்கோடு, உள்ளிட்ட மாவட்டங்கள் நீரில் தத்தளிக்கின்றன

வயநாடு உள்ளிட்ட நகரங்களில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.  ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் இதுவரை கனமழைக்கு  68 பேர் உயிரிழந்துள்ளனர் இதில் பல்வேறு அமைப்பினர், மற்றும் தொண்டு நிறுவனங்கள்  முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு உடை உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர் மன்றத்தினர் ஒன்றிணைந்து வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டதுடன், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கான  உணவு, உடை, குடிநீர், போர்வை, உள்ளிட்டவைகளை வழங்கி சேவை செய்து வருகின்றனர், 

முகாம்களில்  தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் விஜய் ரசிகர்களின் சேவையை பாராட்டி ஊடகங்களுக்கு போட்டி கொடுத்துள்ளனர், அதில், கேரள அரசாங்கம் தருகின்ற பொருட்கள் தங்களுக்கு போதுமானதாக இல்லை என்றும், விஜய் ரசிகர் மன்றத்தினர் தான் தங்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து வருகின்றனர், அவர்களுக்கு நன்றி என விஜய் சிகர்களை பாராட்டி வருகின்றனர். வெறும் பேச்சளவில் மட்டும் அல்லாமல் செயல் அளவிலும்  தாங்கள் யார் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ள விஜய் ரசிகர்கள் கேரள மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளனர். இதனால் சமூக வலைதளங்களில் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.