சுரேஷ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் வி.சி.குகநாதன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்திற்கு, இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் நீதிக்காக போராடும் புரட்சிகரமான இளைஞராக சூரி கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருப்பார். 

அவரது எழுச்சியான நடிப்பும், "நான் யாரோட பாதையிலேயும் போக விரும்பல்லே... நான் போற இடமெல்லாம் பாதையா மாறணும்...!" போன்ற அவர் பேசும் வசனங்களும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தன. 

கடந்த 1982-ம் ஆண்டு வெளியாகி ரஜினியின் வெற்றிப்பட வரிசையில் ஒன்றாக அமைந்த "தனிக்காட்டு ராஜா" படத்தை, 37 ஆண்டுகளுக்குப் பிறகு மறுரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

அதன்படி, விரைவில் தனிக்காட்டு ராஜா திரைப்படம் மறுரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.

 "நான் யாரோட நிழல்லேயும் இளைப்பாறி சோம்பேறி ஆகமாட்டேன்... என் நிழல்லே சோம்பேரிங்க உருவாக அனுமதிக்க மாட்டேன்!" என்ற வசனத்துடன் ரஜினியின் தனிக்காட்டு ராஜா படத்தின் புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டள்ளது.