தமிழ் சினிமாவில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அசைக்க முடியாத இடத்தை பிடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தமன்னா. திருமண வயதை எட்டியும் இவரும் நயன்தாரா, திரிஷா பாணியில் தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பதில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இவருடைய தாய் மொழி இந்தி என்றாலும், இன்னும் இவரால் பாலிவுட் திரையுலகில்  நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை. ஆனால் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இவருக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.

எனினும் தமன்னாவிற்கு பாலிவுட் நடிகர்கள் மீது தான் அதிக ஈர்ப்பு என்பதை அடிக்கடி நிரூபித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தன்னை  மிகவும் கவர்ந்த நடிகர் ஹிருத்திக் ரோஷன் என்று கூறினார். மேலும் அவருடன் முத்தக்காட்சிகளில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக வெளிப்படையாக கூறினார்.

இந்நிலையில் தமன்னா அளித்த ஒரு பேட்டியில், எந்த பாலிவுட் நடிகர் உடன் உங்களுக்கு டேட்டிங் செல்ல ஆசை என கேட்கப்பட்டது. இதற்கு பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் என கூறியுள்ளார்.

விக்கி கவுசல், சமீபத்தில் வெளியான 'உறி' படத்தில் ஹீரோவாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. என்ன தான் தமிழ் நடிகர்களுடன் நடித்தாலும் இவருடைய ஆர்வம் முழுவதும் பாலிவுட் நடிகர்கள் மேல் தான் உள்ளது என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.