thana serntha koottam first look releases on Surya birthday

நடிகர் சூர்யாவின் “தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சூர்யா பிறந்த நாளான ஜூலை 23-க்கு வெளியாகும் என படக்குழு திட்டமிட்டுள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா கதாநாயனாக, கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்‘. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தற்போது இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. படத்தின் இறுதிகட்ட வேலைகளை துரிதப்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூலை முதல் வாரத்தில் வெளியிப்படும் என்று படக்குழு திட்டமிட்டது. ஆனால், ஜூலை 23-ஆம் தேதி சூர்யாவின் பிறந்த நாளாக இருப்பதால் அன்றே, ஃபர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இந்த படத்தில் நகைச்சுவை நடிகரான செந்தில், நடிகை ரம்யா கிருஷ்ணன், சுரேஷ் மேனன், கார்த்திக் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது.