thana serntha koottam final track release
விக்னேஷ்சிவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு செந்தில் தலை காட்டியிருக்கிறார்.

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தில் உ ள்ள ஐந்து பாடல்கள் அடங்கிய ஆல்பம் நேற்று வெளியாவதாகப் கூறப்பட்ட நிலையில், இன்று மாலை 6 மணியளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நானா தானா, சொடக்கு மேல சொடக்கு போன்ற பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும், இன்று வெளியாகும் தன்னுடைய ஃபேவரைட் பாடல் அடங்கிய ஆல்பம் நிச்சயம் ஹிட்டடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்
