thana serntha kootam teaser
நானும் ரௌடிதான் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகர் சூர்யாவை வைத்து இயக்கி வரும் திரைப்படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பாகுபலி படத்திற்கு பின் ரம்யா கிருஷ்ணனும் நடிக்கிறார்.

அனைத்துத் தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பெற்றுள்ள இந்தத் திரைப் படத்தின் டீசர் நேற்று மாலை வெளியானது. டீசர் ஆரம்பத்திலேயே சூர்யா, 'தகுதியே இல்லாதவன் எல்லாம் இங்க’ எனக் கூறி கையை உயர்த்தியும்... தகுதி இருக்குறவன் எல்லாம் எங்க எப்படி ஆனானுங்கன்னு தெரியாம அப்படியே... என இழுக்கிறார்... வசனத்தை காணாம போய்டுறாங்க சார் என முடிக்கிறார்.

அடுத்து சூரியாவோடு மாஸ் என்ட்ரி இல்லா ... செம ஸ்மார்ட் என்ட்ரி... ஐயர் சூர்யா நெத்தில திருநூறு பூசுற மாதிரி... அதுல தம்பி போலீஸ்க்கு தான் ட்ரை பண்றீகலானு... அடுத்த ஷர்ட்ல சிங்கம் சூர்யா ஸ்டைல் பிட்டா மொரப்பா சூர்யா கண்ணாடிய போடுறாரு அதுவும் மூணு ஸ்டைல் ல.
கொழம்பிடாதீங்க 2 சூர்யாவானு..? ஒரே சூர்யாதான். போலீஸ் லா நெறைய பார்த்தாச்சுன்னு சொல்லிக்கிட்டு திரியுற ஜாலியான சூர்யா எப்படி சீரியஸ் போலீஸ் ஆபீசர் ஆகுறாரு என்றதுதான் கதையா இருக்குமோனு ஒரு கோணத்துல யோசிக்க வைக்குது.

இதுல சூர்யா பேசுற வசனங்கள் மாஸ். அதுலயும் ஒருத்தன் பணக்காரனா இருக்க, ஒரு கோடி பேர பிச்சக்காரன் ஆக்குறான்... அதல்லாம் தோண்டி எடுத்தாலே நம்ப நாட்டுல இருக்குற பல பிரச்சனைகள வேரோட புடிங்கிடலாம் என்றது. அதுலயும் தனியா புடுங்க முடியாது... எல்லாரும் சேர்ந்தா புடுங்கிடலாம்னு சொல்லற வசனம்.
இந்த மாதிரி வசனங்கள் கவனிக்க வைச்சாலும்... அனிருத் மியூசிக் சும்மா ஆட்டம் போட வச்சிருக்கு.
