'கேடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தமன்னாவிற்கு திருப்புமுனையாக அமைந்தது 'கல்லூரி' திரைப்படம். இந்த படத்தை தொடர்ந்து கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக நடிகர் விஜய், அஜித், தனுஷ், விக்ரம், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். 

குயின்:

தற்போது இவர் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் நடித்து வெளியாகி தேசிய விருதை பெற்ற திரைப்படமான 'குயின்' படத்தின் தெலுங்கு ரீமேகில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை காஜல் அகர்வால் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

கதைக்கு முக்கியத்துவம்:

குயின் படத்தில் நடித்து வருவதால் இனி கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தான் தேர்வு செய்து நடிக்க போவதாக கூறி வந்தார் தமன்னா. என்னினும் தற்போது தமனாவிற்கு இளவட்ட நடிகர்களுடனான பட வாய்புகள் குறைந்து விட்டதால் இரண்டாம் தட்டு நடிகர்களுடன் நடிக்க ஓகே சொல்லி வருகிறாராம். 

கண்டீஷனை உடைத்த தமன்னா:

மும்பெல்லாம் 50 வயதை எட்டிய நடிகர்களுடன் இணைந்து நடிக்க மாட்டேன், டூயட் பாட மாடேன் என கூறி வந்த இவர் தற்போது 50 வயதை கடந்த நடிகர் படத்தில் நடிக்க எதுவும் சொல்லாமல் ஒற்றுக்கொண்டுள்ளார். 

தெலுங்கு திரைப்படம்:

தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் வெங்கடேஷ் நடிக்க இருக்கும் எப்-2 படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்கிறாராம் தமன்னா. இந்த படத்தில் படு கவர்ச்சியாக நடிக்கவும் டபுள் ஓகே சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது.