கடந்த சில ஆண்டுகளாக நடிகர் சிவா கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த நிலையில், தற்போது சிவா நடிப்பில் வெளியாகியுள்ள 'தமிழ்படம் 2.0' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. 

இந்த படத்தில், சமீப காலமாக மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்த நிஜ நிகழ்வுகள், மற்றும் வெற்றி பெற்ற படங்களில் நடிகர் நடிகைகளின் கவனிக்க வைத்த செய்கைகளை தொகுத்து மிகவும் காமெடிக எடுத்துள்ளார் இயக்குனர் அமுதன்.   

இந்நிலையில், நேற்று உலகம் முழுவதும் தமிழ் படம் 2 வெளியானது. இந்த படத்திற்கு இதுவரை சிவாவின் எந்த படத்திற்கும் கிடைக்காத பிரமாண்ட ஓப்பனிங் இந்த கிடைத்து வருகிறது. 

.

நேற்றைய ஒரு நாளில் மட்டும், முன்னணி நடிகர்கள் படங்களுக்கு இணையாக 'தமிழ்படம் 2' கல்லா கட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் முதல் நாள், மட்டும் ரூ 6 கோடி வரை வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

2018 ஆம் ஆண்டில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள 'காலா', 'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் தமிழ்படம் 2 உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் முன்னணி நடிகர்கள் படங்களுக்கு இணையாக வசூலில் மிரட்டி வருகிறது 'தமிழ்படம் 2.0' என்பது குறிப்பிடத்தக்கது.