தளபதி விஜய் படம் என்று வந்துவிட்டாலே தனி மவுசு தான். படத்தயாரிப்பு தரப்பில் இருந்து ஒரு பக்கம் விளம்பரம் செய்வது போதாது என்று அரசியல்வாதிகள் பக்கம் இருந்தும் கூடுதல் விளம்பரம் செய்யப்படும். மெர்சல் ரிலீஸ் சமயத்தில் கூட இதே சம்பவம் தான் நடந்தது. பாஜகவை தாக்கி பேசினார் என்பதை காரணம் காட்டி அவரை , பாஜக தரப்பினர் ஒரு பக்கம் திட்டி தீர்த்தாலும் அதுவே அப்போது நெகடிவ் பப்ளிசிட்டியாக அமைந்துவிட்டது. சாதாரணமாக மெர்சல் பார்த்தவர்களை விட , இப்படி சர்ச்சைகளுக்கு காரணம் அறிந்திட மெர்சல் பார்த்தவர்கள் தான் அதிகம்.

இதே கதை தான் இந்த முறை சர்கார் படத்திற்கும் நடக்கப்போகிறது என்பது படத்தின் டைட்டில் வெளியான போதே உறுதி ஆகி விட்டது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் ரிலீசான போதே கடும் சர்ச்சைகளுக்குள் சிக்கிக்கொண்டது. ஃபஸ்ட் லுக்கில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்ததை கடுமையாக விமர்சித்தனர் சில அரசியல்வாதிகள்.

சமீபத்தில் நடைபெற்ற சர்கார் இசை வெளியீட்டுவிழாவின் போது விஜய் பேசிய அதிரடி பேட்டி , தற்போது அரசியல்வாதிகள் மத்தியில் கூடுதல் கிலியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் அவரை மீண்டும் விமர்சிக்க துவங்கிவிட்டனர் அரசியல் தரப்பில் இருந்து. அரசியல் சார்ந்த படம் இந்த சர்கார் என்பதனால் தான் விஜய் இப்படி பேசி இருக்கிறார் என்பதை, தமிழக பாஜக தலைவர் தன் பாணியில் விமர்சித்து பேசி இருக்கிறார். 

அப்போது சர்கார் என தலைப்பு வைத்ததற்கே உங்களுக்கு இவ்வளவு  தூரம் மக்களுக்கு நல்லது செய்யும் ஆர்வம் வந்திருக்கிறதே. சர்காராக இருக்கும் எங்களுக்கு மக்களுக்கு நல்லது செய்ய எவ்வளவு ஆர்வம் இருக்கும் என தமிழிசை கேள்வி எழுப்பி இருக்கிறார். அவரின் இந்த கேள்வியை விஜய் ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். மேலும் சர்காருக்கு பாஜக விளம்பரம் உறுதி என்றும் இது போன்ற விமர்சனங்களை கலாய்த்திருக்கின்றனர் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்.