thamizh thaai vazhthu controvercy kamalahassan comment

அரசியல் அறிவிப்பு:

அரசியல் குறித்து அறிவித்து விட்டு, கடந்த ஒரு சில மாதங்களாக அரசியல் குறித்து எந்த அறிவிப்பும் தெரிவிக்காமல் மௌனம் சாதித்து வந்த கமல் தற்போது தீவிரமாக அரசியலில் இறங்க தமிழ்நாடு முழுவதும் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளர்.

சுற்று பயணத்தின் பெயர்:

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், தன்னுடைய சுற்று பயணத்திற்கு பெயர் வைக்க வேண்டும் என்ற உடன் முதலில் தன்னுடைய நினைவுக்கு வந்தது 'நாளை நமதே' என்பது தான் என தெரிவிதார்.

நாளை நமதே கனவு எம்.ஜி.ஆருக்கும் இருந்தது, தற்போது தனக்கும் உள்ளது. 

கட்டண உயர்வு:

பஸ் கட்டணம் உயர்த்தப்படுவது, டீசல் விலை உயர்த்தப்படுவது போன்றவற்றிக்கு தீர்வு காண வேண்டும் என்று சொல்வதை விட செய்துகாட்டுவது சிறந்தது என்றும் இதற்கு உதாரணம் அண்டை மாநிலங்கள் உள்ளது என்றும் கூறினார்.

ஆன்மீக அரசியல் சாத்தியம் இல்லை:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் துவங்கி உள்ள ஆன்மீக அரசியல் என்பது எந்த அளவிற்கு சாத்தியம் என தனக்கு தெரியவில்லை என்றும், கட்சி தொடங்கிய பிறகு நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும், மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தோடு அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என தெரிவத்தார்.

தமிழ் தாய் வாழ்த்து சர்ச்சை:

சமீபத்தில் எழுத தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து வெளிவந்த சர்ச்சைக்கு, கண்ட இடங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தால் தேவையற்ற பிரச்சனைகள் எழத்தான் செய்யும் என்று பதிலளித்தார்.