இயக்குனர் சி.எஸ் அமுதன், அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவை வைத்து இயக்கி இருக்கும் நகைச்சுவைத் திரைப்படம் தமிழ்படம் 2. இத்திரைப்படத்தின் முதல் பாகம், ஏற்கனவே தமிழில் வெளியாகி, ஒட்டு மொத்த தமிழ் திரையுலகையும் கலாய்த்து, மக்கள் மனதில் இடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தயாராகிவரும் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமும், பல்வேறு தமிழ் திரைப்படங்களையும் அளவுக்கதிகமாகவே கலாய்த்திருக்கிறது. தமிழ்படம் 2-ன் டீசர் கூட சமீபத்தில் ரிலீசாகி இருந்தது. மங்காத்தா, கத்தி, தலைவா, ஆம்பள என ஏகப்பட்ட திரைப்படங்களின் காட்சிகளை இத்திரைப்படத்தில் கலாய்த்திருந்தனர்.

எப்போதும் சினிமாவை மட்டும் கலாய்த்து வந்த சி.எஸ்.அமுதன், இந்த திரைப்படத்தில் ஒருபடி மேலே போய், சில முக்கிய அரசியல்வாதிகளையும் கலாய்த்திருக்கிறார். இதனால் தமிழ்படம் 2 ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறது.

நாளை தமிழ்படம் 2 பாடல் ஒன்று வெளியிடப்படவிருக்கிறது. சிவாவிற்கு இந்த படத்தில் வைக்கப்பட்டிருக்கும் அறிமுக பாடல் தான், நாளை ரிலீசாக இருக்கிறது. ஏற்கனவே தமிழ்படத்தில் அவருக்கு வைக்கப்பட்ட அறிமுகப்பாடல் “பச்சை மஞ்சள் சிகப்பு தமிழன் நான்” செம ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

 

நாளை ரிலீசாக இருக்கும் தமிழ்படம் 2-ன் கதாநாயகனுக்கான அறிமுகப்பாடல், அதை விட நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து தமிழ்படம் 2 தெரிவித்து இருக்கும் போஸ்டரில், சமீபத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும், டிக்..டிக்..டிக்.. படத்தினை கலாய்த்திருக்கின்றனர். ”இப்போதான ரிலீசாச்சு அதுக்குள்ள உங்க வேலையை காட்டிட்டீங்களே பாஸ்” என அமுதனிடம் இது குறித்து வேடிக்கையாக கேட்டிருக்கின்றனர் சிலர்.