குடும்ப உறவு, பாசம், காதல் ஆகியவற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் தம்பியாக கார்த்தியும், அக்காவாக ஜோதிகாவும் நடித்துள்ளனர். இவர்களுக்கு அப்பாவாக சத்யராஜ் நடித்துள்ளார். 

கார்த்திக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, '96' புகழ் கோவிந்த் வத்சவா இசையமைத்துள்ளார்.
சமீபத்தில், 'தம்பி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி சமூகவலைதளத்தில் அசத்தலான வரவேற்பை பெற்றது. 

குறிப்பாக, நடிகர்கள் சூர்யா, மோகன்லால் வெளியிட்ட படத்தின் டீசர், யு-டியூப்பில் இதுவரை 5 மில்லியன் வியூசை கடந்து அசத்தி வருகிறது.
'தம்பி' படத்தை வரும் டிசம்பர் 20ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதால், அதற்கு ஏற்றபடி படத்தின் ப்ரமோஷனையும் தீவிரப்படுத்தியுள்ளது. 

அதன் ஒருபகுதியாக, 'தம்பி' படத்தின் இரண்டாவது லுக், இன்று  (நவ.23) 4 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாவது லுக் போஸ்டரை, கார்த்தியே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார். ஏற்கெனவே, கார்த்தி - ஜோதிகா இணைந்திருந்த ஃபர்ஸ்ட் லுக்கே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 'தம்பி' படத்தின் 2-வது லுக்கும் ரசிகர்களின் லைக்குகளை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.