படத்தின் கதையை மாற்றியதை இயக்குநர் தனக்குத் தெரிவிக்கவில்லை என்று ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வெளியேறி, நடிகை தமன்னா  தனது அட்வான்ஸ் தொகையையும் திருப்பிக் கொடுத்த படத்தில் நடிகை காஜல் அகர்வால் கதை கேட்காமலே ஒப்பந்தமானார்.

தெலுங்கில் ’ராஜு காரி காதி’ படத்தின் 3வது பாகத்தை உருவாக்க இருக்கிறார்கள். கதாநாயகியை சுற்றியே நகரும் கதை கொண்ட இந்த படத்தில் நடிக்க தமன்னா ஒப்பந்தம் ஆகியிருந்தார். முதல் இரு நாட்கள் படப்பிடிப்பில் தன்னிடம் சொன்ன கதைக்கும் எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கதைக்கும் வித்தியாசம் உள்ளதை உணர்ந்த தமன்னா, இயக்குநரிடம் கேட்க அவரோ, கதையில் சில மாற்றங்கள் செய்திருக்கிறோம்’ என்றிருக்கிறார். படப்பிடிப்பு துவங்கிய நிலையில், ‘அதை என்னிடம் சொல்லியிருக்க வேண்டாமா.  இந்த படத்தில் என்னால் நடிக்க முடியாது என்று கூறி தமன்னா விலகியுள்ளார்.

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் அந்த வாய்ப்பு தன்னை நோக்கி வந்ததும் சற்றும் யோசிக்காமல், கதையைக் கூட கேட்காமல் காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளாராம். ஏற்கனவே இரண்டு பாகங்கள் ஹார்ரர் படமாக வந்து வெற்றிபெற்ற ‘ராஜு காரி காதி’யின் மூன்றாம் பாகமும் வெற்றி பெறும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை தனக்கு இருப்பதால் அதில் கதை கூட கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டதாக காஜல் அகர்வால் கூறியுள்ளார். ஆனால் தமன்னாவின் படம் தனக்கு வந்துவிட்டது என்று பெருமையடிக்கவே அவர் கமிட் ஆனதாக தெலுங்கு இணையங்கள் தெரிவிக்கின்றன.