தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தமன்னா. பாகுபலி படத்திற்கு பின் இவர் முன்னணி கதாநாயகர்கள் படங்களில் நடிப்பதை தவிர்த்து, கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த 'கண்ணே கலைமானே' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், நடிகர் ஹிருத்திக் ரோஷன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் முத்தக்காட்சியில் நடிக்க தயார் என்று ஓப்பனாக கூறி வாய்ப்பு கேட்பது போல் கூறியுள்ளார் தமன்னா.

மேலும் ஹிருத்திக் ரோஷன் குறித்து தமன்னா தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'என் சினிமா வாழ்க்கையின் ஆரம்ப காலத்திலிருந்து நான் பார்த்து வியந்து கொண்டிருக்கும் ஒருவர் என்றால் அது ஹிருத்திக் தான். அவருடைய கடின உழைப்பு என்னை ஈர்த்தது.

ஹிருத்திக்கை நேரில் பார்க்க வேண்டும் என பல வருடங்களாக காத்திருந்தேன், அது இப்போது நிறைவேறியது என்று கூறி அவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.