தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தமன்னா. இவர் தமிழில் அறிமுகமான 'கேடி'  திரைப்படம், இவருக்கு வெற்றிப்படமாக அமையவில்லை என்றாலும், 'கல்லூரி' படத்திற்கு பின் இவர் தேர்வு செய்த படங்கள் இவரை தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக மாற்றியது.

விஜய், அஜித், சூர்யா, தனுஷ் , விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். மேலும் பாகுபலி படத்திற்கு பின் இவருடைய லெவல் வேறு எங்கோ போய் விட்டது.

தற்போது, சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கியுள்ளார் தமன்னா.   அந்த வகையில் இவர் தமிழில் உதயநிதிக்கு ஜோடியாக 'கண்ணே கலைமானே' படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் தெலுங்கில் சிரஞ்சீவியின் 'சயீரா நரசிம்ம ரெட்டி' படத்தில் புரட்சிகர பெண்ணாக நடிக்கிறார். 

சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் தான் நடிக்கும் வேடம் பற்றி தமன்னா கூறுகையில், சிரஞ்சீவியுடன் நடிக்க வேண்டும் என்பது என் வாழ் நாள் கனவு இந்த படத்தின் மூலம் அது  நனவாக்கி உள்ளது.

இதற்க்காக இயக்குனர் சுரேந்தர் ரெட்டிக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும். சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்தது பெருமையாக உள்ளது. படத்தை திரையில் காண ரசிகர்கள் போல் தானும் ஆவலோடு காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.