இயக்குனர் விஜய் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியாகி சூப்பர்ஹிட் ஆனா படம் தேவி. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்தில் நாயகனாக நடித்தவர் நடன இயக்குனர், பிரபு தேவா மற்றும் நாயகி தமன்னா இருவரையும் இணைத்து பல கிசுகிசு வெளிவந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் இருவரும் இணைந்து கிராமத்து கதைகளை நேர்த்தியாக எடுத்து வெற்றிகொடுத்து வரும் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது .

இந்த படம் குறித்து அதிகார பூர்வ தகவல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்று கூறப்படுகிறது, மேலும் இந்த படத்தை அம்மா கிரேஷன்ஸ் டி.சிவா தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவந்து 100 நாட்களை கடந்து ஓடிய தர்மதுரை படத்திலும் தமன்னா நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.