இதற்கு முன்னதாக என்னை அறிந்தால் படத்தில் தல அஜித்திற்கு வில்லனாக நடித்து மாஸ் காட்டியிருந்தார் அருண் விஜய். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக கடந்த 13ம் தேதி வெளியானது. கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டரில் வெளியான மாஸ் ஹீரோ படம் என்பதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதையடுத்து நயன்தாராவுடன் ‘கோலமாவு கோகிலா’, சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் அடுத்தப் படத்தில் விஜய் நடிக்க உள்ளார். தலைப்பு வைக்கப்படாத இந்த படம் தற்காலிகமாக தளபதி 65 என அழைக்கப்படுகிறது. 

சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'முகமூடி' படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை பூஜா ஹேக்டே தளபதி 65 படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் நடிகர் அருண் விஜய்யை வில்லனாக நடிக்க வைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. 

இதற்கு முன்னதாக என்னை அறிந்தால் படத்தில் தல அஜித்திற்கு வில்லனாக நடித்து மாஸ் காட்டியிருந்தார் அருண் விஜய். எனவே தளபதிக்கும் அவரையே வில்லனாக நடிக்கவைக்கலாம் என பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் இதை அருண் விஜய் தரப்பு முற்றிலும் மறுத்துள்ளதோடு, வதந்தி என்றும் விளக்கம் அளித்துள்ளது.