Thalapathy Vijays Mersal to be screened in the Le Grand Rex Paris
தளபதி விஜய் மூன்று வேடங்களில் அசத்தும் மெர்சல் படம் தீபாவளிக்கு மிக பிரமாண்டமாக வெளியாகவுள்ள உள்ளது. விஜயின் மெர்சலை வரவேற்க ரசிகர்கள் பேனர், கட் அவுட் என உலகம் முழுவதும் கொண்டாட உள்ளனர்.

உலகம் முழுவதும் 2000 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் மெர்சல் ரிலீஸ் ஆகவுள்ளது. தற்போது பாரிஸில் உள்ள Grand Rex திரையரங்கில் இந்த படம் வெளியாகவுள்ளது தான் ஆச்சர்யம்.

ஐரோப்பாவின் மிகப்பெரிய திரையரங்கம் இது என்பதால் தான் அது. ஒரே நேரத்தில் 2800 பேர் அமர்ந்து பார்க்கும் அளவுக்கு பெரிய Grand Rex திரையரங்கில் அக்டோபர் 18ம் தேதி மெர்சலாக வெளியாகவுள்ளது தளபதியின் மெர்சல். இந்த அறிவிப்பை Grand Rex தமது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Le 18/10, venez découvrir le nouveau film avec la superstar @actorvijay : #Mersal ! En tamoul sous-titré / Résa : https://t.co/w3c6exP4Hbpic.twitter.com/sh68dtY7Zn
— Le Grand Rex (@LeGrandRex) October 3, 2017
இதற்கு முன்பு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி, இந்தியாவின் மிக பிரமாண்ட படைப்பான பாகுபலி 2 ஆகிய படங்கள் இங்கு திரையிடப்பட்டது. இந்த சூழ்நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் ஸ்ட்ரிக் விஷயம் தீபாவளிக்குள் முடித்து விடுவார்கள் என்பதால், படம் ரிலீஸ் எந்த விதத்திலும் தடைபடாது என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் கூறியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது
