அன்புமணி மகள் தயாரித்த அலங்கு பட டிரைலரை பார்த்து மெர்சலான விஜய்!

Vijay Wishes Alangu Movie : அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா தயாரித்துள்ள அலங்கு படத்தின் டிரைலரை பார்த்து படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டி உள்ளார் விஜய்.

Thalapathy Vijay Wishes Anbumani Daughter Sangamithra produced Alangu Movie gan

அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா, அலங்கு படம் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக களமிறங்கி உள்ளார். இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக தமிழக - கேரள எல்லையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகளால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அலசி ஆராய்ந்துள்ள படம் தான் அலங்கு. இப்படம் வருகிற டிசம்பர் 27-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

அலங்கு திரைப்படத்தின் டிரைலரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரிலீஸ் செய்த நிலையில், தற்போது தளபதி விஜய்யை சந்தித்துள்ள அலங்கு படக்குழுவினர், அவருக்கு அலங்கு பட டிரைலரை போட்டுக்காட்டி வாழ்த்து பெற்றுள்ளனர். சென்னையில் உள்ள நடிகர் விஜய்யின் அலுவலகத்தில் அவரை சந்தித்து பேசிய படக்குழுவினர் டிரைலரை போட்டுக்காட்டியபோது அதை பார்த்து மெர்சலான விஜய், சூப்பராக இருப்பதாக பாராட்டினார்.

இதையும் படியுங்கள்... விஜய்யை பார்க்க ஓடோடி வந்த ரஜினிகாந்த்: ரஜினியை பார்த்ததும் விஜய என்ன செய்தார் தெரியுமா?

Thalapathy Vijay Wishes Anbumani Daughter Sangamithra produced Alangu Movie gan

இதையடுத்து அலங்கு படக்குழுவினருடன் சிறுது நேரம் கலந்துரையாடிய அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா, படத்தைப் பற்றியும் படக்குழுவினர் பற்றியும் விஜய்யிடம் எடுத்துக் கூறினார். பின்னர் அலங்கு படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட விஜய், தன்னை காண வந்த அலங்கு படக்குழுவினருக்கு புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கி இருந்தார். அந்த புத்தகத்தில் ‘அலங்கு படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் ப்ரியமுடன் விஜய்’ என குறிப்பிட்டிருந்தார்.

அலங்கு திரைப்படத்தை எஸ்.பி.சக்திவேல் இயக்கி இருந்தார். இவர் ஏற்கனவே தமிழில் உறுமீன், பயணிகள் கவனிக்கவும் போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். அலங்கு திரைப்படத்தில் ஹீரோவாக குணாநிதி நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அலங்கு திரைப்படத்தின் ரிலீஸுக்கு முன்னர் ரஜினிகாந்த் மற்றும் விஜய் படக்குழுவை பாராட்டி உள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படியுங்கள்... தளபதி 69 : புத்தாண்டுக்கு புது அப்டேட் உடன் வருகிறார் விஜய்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios