Thalapathy 68 : இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக பிரபல நடிகர் தளபதி விஜய் நடித்து வரும் படம் தான் "The Greatest Of All Time". இப்பட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.

பிரபல நடிகர் தளபதி விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்கின்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இது தளபதி விஜயின் 68 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. மீனாட்சி சவுத்ரி இந்த திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க, முன்னணி நடிகர், நடிகைகளான பிரசாந்த், பிரபுதேவா, லைலா மற்றும் சினேகா உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். 

ஏற்கனவே பல வெளிநாடுகளிலும், சென்னை உள்ளிட்ட பல நகரங்களிலும் இப்பட பணிகள் நடந்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவுக்காக தளபதி விஜய் சென்னை வந்திருந்தார். அதன் பிறகு அவர் ரஷ்யாவில் "கோட்" படப்பிடிப்பில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியானது. 

Nayanthara: இன்னொரு குழந்தை எங்கே? ஒற்றை குழந்தையோடு... கொச்சி ஏர்போர்ட்டுக்கு வந்த நயன்தாரா.!

இந்நிலையில் 50 சதவீதத்திற்கு மேல் இப்பட பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று துபாய் வழியாக அமெரிக்கா சென்று அங்கு மீண்டும் படப்பிடிப்பில் தளபதி விஜய் ஈடுபட உள்ளார். அதற்காக இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் துபாய் நாட்டிற்கு புறப்பட்டார். அவர் விமான நிலையத்திற்குள் சென்ற வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Scroll to load tweet…

தளபதி விஜய் அடுத்தபடியாக பிரபல இயக்குனர் வினோத்துடன் ஒரு திரைப்படத்தில் இணையுள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அப்பட பணிகளை முடித்த பிறகு தனது 35 ஆண்டுகால சினிமா வாழ்க்கைக்கு முடிவுரை எழுதிவிட்டு, தனது அரசியல் வாழ்க்கைக்கு முன்னுரை எழுதவிருக்கிறார் தளபதி விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் "தமிழக வெற்றிக் கழகம்" சார்பாக முதல்வர் வேட்பாளராக தளபதி விஜய் களமிறங்க உள்ளார். 

மகாபாரதம் இல்லை... இன்னொரு கனவுத் திட்டத்தை வெளியிட்ட 'பாகுபலி' இயக்குநர் ராஜமௌலி!