வெறித்தனம்... கார்த்திருக்கு செம்ம சம்பவம்!! புதிய 'லியோ' போஸ்டரை வெளியிட்டு உறுதி செய்த லோகேஷ் கனகராஜ்!
'லியோ' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ள நிலையில், அந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் தளபதி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

'மாஸ்டர்' படத்தின் வெற்றிக்கு பின்னர், மீண்டும் இரண்டாவது முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது. குறிப்பாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், கெளதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், பிரியா ஆனந்த், கதிர், பிக்பாஸ் ஜனனி, போன்ற பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நீண்ட இடைவெளிக்கு பின்னர் திரிஷா இணைந்துள்ளார். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி, உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
தளபதி ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக 'லியோ' மாறி உள்ள நிலையில், அவ்வபோது இந்த படத்தின் அப்டேட்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மிரட்டலான போஸ்டர் ஒன்றை லியோ படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் "அமைதியாக இருங்கள் மற்றும் போருக்கு தயாராகுங்கள்" (KEEP CALM AND PREPARE FOR BATTLE) என்கிற கேப்ஷன் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும் தளபதி விஜய் தன்னுடைய கத்தியை தீ பொறி பறக்க, வெறித்தனமான கோபத்துடன் சாணை பிடிப்பது போல் உள்ளது. இதை பார்த்து ரசிகர்கள் லியோவில் செம்ம சம்பவம் கார்த்திருக்கிறது என கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
தற்போது வெளியாகியுள்ள போஸ்டர் இதோ..