அவர் பணத்தில் முதல்வராகணும்.. ஆனா அந்த விஷயத்தில் தளபதி ரொம்ப பயப்படுகிறார் - விஜயை வம்பிழுக்கும் பயில்வான்!
Thalapathy Vijay Political Entry : தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் உலக அளவில் மெகா ஹிட் படமாக ஓடிவரும் நிலையில், அந்த படத்தின் வெற்றி விழா நிகழ்வில் அரசியல் குறித்த பேச்சுகள் பல எழுந்தது குறிப்பிடத்தக்கது.
தளபதி விஜய் அவர்கள், தான் அரசியலுக்குள் நுழையப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் கூட, அவர் மேடை ஏறி பேசும் ஒவ்வொரு பேச்சிலும் அவருடைய அரசியல் வருகைக்கான ஒரு குறியீட்டை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார் என்றே கூறலாம். அவருடைய ரசிகர்களுக்கும் அவருடைய அரசியல் வருகையில் பெரிய அளவில் எதிர்பார்த்திருக்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன்பு தமிழக அளவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாண மாணவிகளை அழைத்து அவர்களுக்கு பரிசுகளும், பட்டயங்களும் வழங்கியதில் இருந்தே அவருடைய அரசியல் வருகை உறுதியாகிவிட்டதாக பலரும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் அவருடைய விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
ஆனால் இந்த நலத்திட்ட உதவிகளுக்கு விஜய் பணம் கொடுப்பதில்லை என்றும், அந்த மன்றத்தை சேர்ந்த நிர்வாகிகள் தான் தங்கள் கை காசு போட்டு பணிகளை செய்து வருவதாகவும் சில விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் இவ்வளவு பெரிய விஷயத்தை செய்ய மன்றத்து நிர்வாகிகளுடைய பணம் பத்தாது என்றும், ஆகவே தளபதி விஜய் அவர்களும் பெரிய அளவில் இரவு நேர பாடசாலைகளுக்கும் பிற நலத்திட்ட உதவிகளுக்கும் பணம் கொடுத்து வருவதாக ஒரு சாரார் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல அரசியல் மற்றும் சினிமா விமர்சகரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் விஜயின் அரசியல் வாழ்க்கை குறித்து பேசி உள்ளார். அவர் பேசுகையில் "விஜய் முதல்வராக வேண்டுமென்றால் அவருடைய காசில் அந்த புகழை தேட வேண்டும், அவருடைய முதலமைச்சர் கனவை நிறைவேற்ற அவர்தான் பணத்தை செலவு செய்ய வேண்டும்".
"உண்மையில் சொல்லப்போனால் இன்னும் விஜய் அரசியல் செய்யும் அளவிற்கு பக்குவப்படவில்லை, நேரடியாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசவே அவர் பயப்படுகிறார்" என்று பயில்வான் ரங்கநாதன் கூறினார். மேலும் "தோல்வியை ஒத்துக்கொள்கிற கலைஞர் கருணாநிதியின் சாணக்கியத்தனம் விஜயின் லியோ திரைப்பட வெற்றி விழா பேச்சில் தென்பட்டதாகவும்" அவர் கூறியுள்ளார்.
விஜய் அரசியலுக்கு வரும் எண்ணத்தில் தான் இருக்கிறார் என்று கூறிய அவர் அதற்காக அவர் இன்னும் நிறைய பயிற்சி பெற வேண்டும் என்றும் கூறினார்.