தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத வெற்றி நாயகனாக வலம் வருபவர் விஜய். ரசிகர்களால் தளபதி என அன்போடு அழைக்கப்படும் விஜய்க்கு வரும் 22ம் தேதி பிறந்த நாள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தமிழ்நாட்டில் பட்டையைக் கிளப்பும். பட ரிலீஸ், புதுப்பட அறிவிப்பு என விஜய் பற்றிய ஸ்பெஷல் விஷயங்கள் அனைத்தும் அன்று சோசியல் மீடியாவை திக்குமுக்காட வைக்கும். ஆனால் தற்போது கொரோனா பிரச்சனையால் மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியாகவும், மனதளவிலும் பல சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: “இந்த இரண்டை மட்டும் செய்தால் போதும்”... குஷ்புவின் ஸ்லிம் லுக் ரகசியம்...!

கொரோனா பிரச்சனை காரணமாக மக்கள் சிக்கலில் சிக்கித் தவிக்கும் இந்த நேரத்தில் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாமென ரசிகர்களுக்கு தளபதி விஜய் அன்புக்கட்டளை பிறப்பித்துள்ளாராம். இதுகுறித்து அனைத்து ரசிகர்கள் மன்றத்திற்கும் விஜய் அலுவலகத்தில் இருந்து போன் கால் பறந்துள்ளது.  ஏற்கனவே கொரோனா பிரச்சனையால் கஷ்டப்படும் ஏழை, எளிய மக்களுக்கு விஜய் ரசிகர்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். எனவே தனது பிறந்த நாளின் போது தேவையற்ற ஆடம்பர கொண்டாட்டங்களை தவிர்த்துவிட்டு, கொரோனாவால் திண்டாடும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி அன்று  அவர் நடித்துள்ள மாஸ்டர் படம் குறித்த ஸ்பெஷல் அப்டேட் ஏதாவது வெளியாகும் என ரசிகர்கள் நினைத்திருந்தனர். தளபதி பிறப்பித்துள்ள உத்தரவைப் பார்த்தால் அப்படி எதுவும் தேறாது போல் தெரிகிறது. மாநகரம், கைதி போன்ற வித்தியாசமான படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் உடன் தளபதி முதன் முறையாக கூட்டணி அமைத்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். அதேபோல் இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

இதையும் படிங்க: என்ன கொடுமை சார் இதெல்லாம்... வைரலாகும் “அன்றே கணித்த சூர்யா” மீம்ஸ்... ஸ்பெஷல் தொகுப்பு...!

இதற்கு முன்னதாக தல அஜித் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாமென ரசிகர்களுக்கு கட்டளை விடுத்திருந்தார். அதேபோல் அஜித்தின் வலிமை படம் குறித்த எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.