இந்நிலையில் தனக்காக நடிகர் விஜய் செய்த சுவாரஸ்யமான விஷயம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரத்னகுமார். 

பிகில் படத்தை தொடர்ந்து "தளபதி 64" படத்தில் விஜய் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். மேலும் ஆண்ட்ரியா, கெளரி கிஷன், ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, விஜே ரம்யா, சவுந்தர்யா, ஸ்ரீமன் என நட்சத்திர பட்டாளமே தளபதி 64 படத்தில் இணைந்துள்ளது. இந்தப் படத்திற்கு ராக் ஸ்டார் அனிரூத் இசையமைக்கிறார். 

இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அடுத்த மாதம் தான் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்பதால், ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் பிப்ரவரி மாதம் நிறைவு பெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஆடை பட இயக்குநரும், லோகேஷ் கனகராஜின் நண்பருமான ரத்னகுமார் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தனக்காக நடிகர் விஜய் செய்த சுவாரஸ்யமான விஷயம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரத்னகுமார். 

Scroll to load tweet…

அதாவது, "தொடர் பயணங்கள் மற்றும் மக்கள் சந்திப்பு காரணமாக டெல்லி ஷூட்டிங்கில் பங்கேற முடியவில்லை. ஆனால் லோகேஷ் கனகராஜ் எண்ணில் இருந்து எனக்கு ஒரு போன் வந்தது, மச்சி ஹாப்பி பர்த்டே டா என தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ் குரலில் மிமிக்ரி செய்து வாழ்த்து தெரிவித்தார். வாழ்க்கை பயனுள்ளதாக மாறியது. அனைவருக்கும் நன்றி" என பதிவிட்டுள்ளார். இந்த ட்விட்டரைப் பார்த்த விஜய் ரசிகர்கள் தளபதி செம்மையா மிமிக்ரி பண்ணி கெத்து காட்டிடாரு போல என மகிழ்ச்சி உள்ளனர்.